கற்பகக் காவு கருதிய காதலிக்கு, * இப்பொழுது ஈவது என்று இந்திரன் காவினில் * நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள், * உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்.
பெரியாழ்வார் திருமொழி 1.10.9
தேவந்திரனுடைய நந்தவனத்தில் இருக்கின்ற கல்ப மரத்தை, (தன்னுடைய வீட்டின் முற்றத்தில் நட்டுத் தர வேண்டும் என்று) ஆசைப்பட்ட தன்னுடைய பிரியமான ஸத்யபாமை பிராட்டிக்கு, இப்போதே அவற்றை கொணர்ந்து தரக்கடவேன் என்று நிலவால் விளங்குகின்ற அவள் வீட்டு முற்றத்தில் (கல்ப மரத்தை, பிடுங்கி கொண்டு வந்து) நட்டு, அந்த கல்ப மரத்தை செழிப்பித்தவன், நித்யசூரிகளுக்கு ஸ்வாமியானவன் என்னை புறம் புல்குவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் ஸத்யபாமாவின் மகிழ்ச்சிக்காக இந்திரனின் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தினை எடுத்து தன்னுடைய அரண்மனையில் சேர்த்த எம்பெருமான், என் முதுகினை கட்டி கொள்கிறான் என்று யசோதை பாடும் வகையில் அமைந்த பாடல்.
‘கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை ‘ (பெரிய திருமொழி 6.8.7) என்று சொன்னதை, ஸ்ரீமத் துவாரகையில் நிலா முற்றத்தில் நட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
பிராட்டி உகப்புக்காக செய்த இந்த செய்கையால், இவன் ஸ்வபாவத்திற்கு தோற்று எழுதிக் கொடுக்கும் நித்ய சூரிகளுக்கு நிர்வாகககன் எண்ணை புறம் புல்குகிறான் என்கிறார்.
Leave a comment