ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய, * வேய்த் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து * ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் * வாய்த்த நின் மக்களைப் பெற்று மகிழ்வரே.
பெரியாழ்வார் திருமொழி 1.10.10
மூங்கிலுக்கு ஒத்ததாய், தோள்களை உடைய தாயான யசோதை பிராட்டி, அக்காலத்தில் திருக்கையில் திருவாழியை உடைய கண்ணன் பிரான், புறம் புல்கின விதங்களை சொன்ன சொற்களை பெரியாழ்வார் உகந்து அருளி செய்ததாய் தமிழ் இந்த பத்து பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகைக்கு ஈடாகப் பொருந்தின சிறந்த சிஷ்ய புத்திரர்களை பெற்று மகிழ்வர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மூங்கில் போன்ற பெரிய தோள்களை உடைய யசோதை அன்று சுதர்சன சக்கரத்தை ஏந்துகிற கண்ணன் தன் முதுகினை கட்டிக்கொண்டதை சந்தோஷமாக அனுபவித்த யசோதையின் மகிழ்ச்சியை இந்த விஷ்ணுசித்தன் என்ற ஆழ்வார் அருளிய பாடலைகளை அறிந்தவர் சிறந்த மக்களை பெற்று மகிழ்வர் என்று சொல்லி இந்த பதிகத்தையும் இந்த முதல் பத்தையும் முடிக்கிறார்.
Leave a comment