திவ்ய பிரபந்தம்

Home

1.10.4 நாந்தகம் ஏந்திய நம்பி

நாந்தகம் ஏந்திய நம்பி சரணென்று, * தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில், * வேந்தர்களுட்கு விசயன் மணித் திண் தேர் * ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்.

பெரியாழ்வார் 1.10.4

நந்தகம் என்னும் (திருக்குற்று) வாளை, (எல்லா காலங்களிலும் அடியவர்களைக் காப்பதற்காக, பூ ஏந்தியதை போல), திருக்கையில் அணிந்து கொண்டுள்ள, (ரக்ஷிப்பது போன்ற) கல்யாண குணங்களில் பூர்ணனான கண்ணனே, நீ எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சரணாகதனான அர்ஜுனனுக்காக, இந்த பூமியில் மற்ற அரசர்கள், (‘நாம் இனி ஜீவப்பது என்பது ஒன்று உண்டோ ‘ என்று) நெஞ்சம் பயந்து அஞ்சும் படி, அந்த அர்ஜுனனின் அழகிய வலிமையான தேரினை செலுத்திய கண்ணன், என்னுடைய முதுகினை கட்டிக் கொள்கிறான், தேவர்களுக்கு நாதனான கண்ணன் என்னை புறம் புலகுவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இப்படி கெட்டவர்களை அழித்து பூமி பாரத்தை போக்குவதற்காக அவதாரம் எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்ட தேவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்ததால், தேவர்களுக்கு நிர்வாககன் ஆகிறான்.

Leave a comment