திவ்ய பிரபந்தம்

Home

1.10.3 கத்தக் கதித்துக் கிடந்த

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ் செல்வம், * ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான், * கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய, * அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்.

பெரியாழ்வார் திருமொழி 1.10.3

மிகவும் கொழுத்து கிடந்த (அதிக அளவான) பெரும் செல்வத்தை (தன் சகோதர்கள்) பாண்டவர்ளுடன் சேர்ந்து நெஞ்சு பொருந்தி ஜீவிக்காமல், பூமி முழுவதும் தான் ஒருவனாகவே ஆளுவதாக நினைத்து இருந்த, முதல்வனாய் இருந்து உள்ள, துரியோதனன் (கூட்டத்தை) சந்ததி இன்றி அழிந்து போகும்படி, சாரதியாக வழி நடத்தி, விளங்கிய ஸ்வாமியான கண்ணன் வந்து தன்னை முதுகில் கட்டி கொள்ளுகிறான், இடைக்குலத்திற்கு தலைவனான பிரகாசமான கண்ணன் என்னை புறம் புல்குவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘தக்கத்தடித்து, பக்கப்பருத்து’ என்று சொல்வது போல், கத்தக் கதித்துக் என்று சொல்லி, கொழுத்துக் கிடந்த மமதை என்ற ஐஸ்வரியத்தை சொல்கிறார்.

Leave a comment