கிங்கிணி கட்டிக் கிறி கட்டி கையினில், * கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டி, * தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து, * என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான், எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்.
பெரியாழ்வார் திருமொழி 1.10.2
என் கண்ணன் (திருஅரையில்) சதங்கை கட்டிக் கொண்டும், சிறு பவள வடத்தை முன்கையில் கட்டிக் கொண்டும், தோள் வளையை திருத்தோளில் சாத்திக் கொண்டும், கழுத்திலே சங்கலியை அணிந்து கொண்டும் அந்த திருஆபரணங்கள் கூட்டத்தோடு, அணிந்து கொண்டும், அழகாக, நான் அறியாதபடி நடந்து வந்து என் முதுகினை கட்டிகொள்கிறான், எனக்கு சுலபமானவன், ஸ்வாமியானவன் என்னை பின்னால் இருந்து வந்து கட்டி கொள்கிறான என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment