கண்ட கடலும் மலையும் உலகேழும், * முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓஒவென்று, * இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள, * மண்டை நிறைத்தானே அச்சோ வச்சோ மார்வில் மறுவனே அச்சோ வச்சோ.
பெரியாழ்வார் திருமொழி 1.9.9
நெருங்கி இருக்கின்ற ஜடா முடியை உடைய சிவன், ‘கண்ணால் காணப்பட்ட கடல்களும், மலைகளும் ஏழு உலகங்களும், (ஆகிய எல்லா இடங்களிலும் திரிந்து யாசகம் பெற்றும், எல்லாவற்றையும் இட்டு நிறைக்கப் பார்த்தாலும்), தன் கையில் உள்ள கபாலத்திற்கு போதாமல் இருந்தன. தானத்தில் மேகத்திற்கு ஒத்தவனே என்று இப்படி (கதறி), யாசித்த அளவில், (‘நம்மை ஒழிய இவருக்கு வேறு கதி இல்லை’ என்று, அந்த) கபாலத்தை ‘அரர்க்கு பிச்சைபெய் கோபால கோளரி ‘ (திருவாய்மொழி 2.2.2) என்பது போல, அது நிறையும்படி செய்தவனே, அச்சோ அச்சோ, திருமார்பில் ஸ்ரீ வத்ஸத்தை உடையவனே, அச்சோ அச்சோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மூவேழகு உலகத்தில் உள்ள அனைத்தை கொண்டு நிரப்பியும் தன்னுடைய கையில் ஒட்டிக்கொண்ட கபாலம் நிறைவு பெறாமல் இருந்த போது எம்பெருமான் நிரம்ப செய்தான். திருமார்பில் ஸ்ரீவஸ்தம் என்ற மறுவினை உடையவனே என்று பாடுகிறாள்.
Leave a comment