நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை, * அச்சோ வருகவென்று ஆய்ச்சி உரைத்தன, * மச்சணி மாடப் புதுவைகோன் பட்டன் சொல், * நச்சலும் பாடுவார் நீள்விசும்பு ஆள்வரே.
பெரியாழ்வார் திருமொழி 1.9.11
தன்னை காண விரும்புபவர்களுடைய முன்னே வந்து நிற்கிற ஸ்ரீமன் நாராயணனை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று மாதாவான யசோதை அழைத்து சொன்ன பாசுரங்களை பலநிலமான மாடங்களை (ஒரு வித கட்டிடம்) உடைய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு ஸ்வாமியாய் பிராமணர்களில் உத்தமரான பெரியாழ்வார் அருளி செய்த இந்த பாசுரங்களை சர்வ காலமும் அன்புடன் ஓத வல்லவர்கள் பிரகாசமாக இருக்கும் பரம பதத்தை நிர்வகிக்க கடவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தன்னை விரும்பி பக்தி பண்ணுபவர்களுடைய முன்னே வந்து நிற்கும் தன்மையுள்ள நாராயணனான கண்ணன், யசோதை அச்சோ அச்சோ என்று வரவழைத்து பாடிய பாடல்களை பாடுபவர்கள் எப்பொழுதும் பிரகாசமாக உள்ள பரம பதத்தில் நிலைத்து வாழ்வார்கள் என்று பல ஸ்ருதி பாடி முடிக்கிறார்.
Leave a comment