வெண்புழுதி மேல்பெய்து கொண்ட அளைந்ததோர் வேழத்தின் கருங்கன்று போல், * தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறுபுகர் படவியர்த்து, * ஒண் போதலர் கமலச் சிறுக்கால் உரைத்து ஒன்றும் நோவாமே, * தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ.
பெரியாழ்வார் திருமொழி 1.8.9
வெள்ளை புழுதியை மேலே கொண்டு அளைந்த ஒரு கறுத்த ஆனை குட்டி போல், தெள்ளிய புழுதியிலே விளையாடிய கண்ணன், திரிவிக்கிரமனாக தன் பெரிய திருவடிகளால், அவைகளுக்கு ஏற்படும் துன்பங்களை பற்றி கவலைபடாமல், அடியவன் இந்திரனுக்காக மூன்று அடிகளால், உலகத்தை அளந்தவன், சிறிய திருமேனி புகர்த்து தோன்றும்படி வியர்த்து அழகியதாய், உரிய காலத்திலே மலர்ந்த தாமரைப்பூ போன்ற சிறிய திருவடிகள் மிதித்த இடத்திலே ஒன்றும் நோவாதபடி குளிர்ந்த பூக்களை உடைய மெத்தையின் மேல் தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பெரிய திருவடிகளைக் கொண்டு உலகம் மூன்றையும் அளந்த திரிவிக்ரமன் ஆன கண்ணன், தனது சிறிய அடிகளைக் கொண்டு பூ மெத்தையின் மேல் கால் உறுத்தாமல் மெல்ல நடக்க வேண்டும் என்றும், கருநிறமான கண்ணன் திருமேனியில் படிந்த புழுதியில் வேர்வை நீர், அழகியதாய் உள்ளது என்றும் கூறி தளர் நடை நடக்க வேண்டும் என்கிறாள்.
Leave a comment