திவ்ய பிரபந்தம்

Home

1.8.11 ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை, * தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை, * வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்கவல்லார், * மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே.

பெரியாழ்வார் திருமொழி 1.8.11

இடைக் குலத்தில் வந்து தோன்றிய, (கண்டவர்கள் கண் குளிரும்படி), மை போன்ற வடிவை உடைய கண்ணனை, பெற்ற தாயான யசோதையும் அவளை போன்ற மற்றவர்களும் மகிழ, (பூதனை, சகடாசுரன், கம்ஸன் முதலிய) பகைவர்கள் (தலை எடுக்க, அவர்களை அழிக்கும் வல்லவனாக கண்ணன் வளர, அவர்கள்) மனம் ஒடுங்கி போக, கண்ணன், தளர் நடை நடந்ததை, வேயரானவர்கள் புகழும்படி பெரியாழ்வார் சீர்மையோடு விவரமாக அருளிச் செய்த இவற்றை ஓத வல்லவர்கள், ஆச்சர்ய சக்தி உடையவனாய் நீல மணி போன்ற வர்ணத்தை உடையவனான எம்பெருமானுடைய திருவடிகளில் அடிமை செய்யத்தக்க பிள்ளைகளை பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மக்கள் பொதுவாக கூறியதால், வித்தையாலும், ஜன்மத்தாலும் வரும் இரண்டு விதமான புத்திரர்களையும் சொல்கிறது.

ஆடு, மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்து, தாய்மார்களுக்கு இன்பத்தையும், எதிரிகளுக்குப் பயத்தையும் கொடுக்கின்ற கருமையான நிறமுள்ள கண்ணன் தளர்நடை நடந்ததை பற்றி, வேயர் குலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விஷ்ணுசித்தரின் இந்தப் பாடல்களை எம்பெருமானின் திருப்பாதங்களில் பக்தி கொண்ட குழந்தைகளைப் பெறுவார்கள்.

கண்ணன் ஆயர் குலத்தில் பிறந்ததையே எல்லோரும் அறிந்தது. யாரும், கண்ணன் அரசர் குலத்தில் அவதரித்ததை அறியாதவர்கள்;

Leave a comment