திவ்ய பிரபந்தம்

Home

1.8.10 திரை நீர்ச் சந்திர மண்டலம்

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண்மால் கேசவன் தன், * திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர, * பெருநீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம், * தருநீர் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ.

பெரியாழ்வார் திருமொழி 1.8.10

அலைகளை தூக்கி அடிக்கும், கடலின் இடையில் சலித்து தோன்றுகின்ற சந்திரமண்டலம் போல், சிவந்த திருக்கண்களையும், கறுத்த நிறத்தை உடைய தலைமுடி கொண்டவரும் ஆன, எளிமையான குணம் கொண்டவரும், திருமுக மண்டலத்தில் பிரகாசிக்கின்ற சுட்டியானது எங்கும் விளங்கி இடதும் வலதுமாக அசைய, புண்ணிய தீர்த்ததங்களில் சிறந்ததான வெள்ளை நீர் அலைகின்ற கங்கையை காட்டிலும் பெரிய தனித்தன்மை வாய்ந்த தீர்த்த பலத்தை தரத்தக்க ஜலத்தை உடைய சிறுநீர் துளிக்க துளிக்க தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கருநிறமான கடலின் நடுவில் அசைந்து கொண்டு தோன்றும் சந்திரனின் பிம்பம் போல கரு நிற கண்ணன் என்ற கேசவனின் நெற்றியில் தொங்குகின்ற சுட்டி அசையவும், மூத்திர நீர் துளிதுளியாகச் சிந்தவும், தளர்நடை நடந்து வர வேண்டும் என்று யசோதை கேட்டுக் கொள்கின்ற பாடல்.

Leave a comment