திவ்ய பிரபந்தம்

Home

1.8.5 முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட, * பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் * பன்னி உலகம் பரவி யோவாப் புகழ்ப் பல தேவன் * என்னும், தன் நம்பியோடப் பின்கூடச் செல்வான் தளர்நடை நடவானோ.

பெரியாழ்வார் திருமொழி 1.8.5

முன்னே நன்றாய் தனித்தன்மை வாய்ந்த ஒரு பெரிய வெள்ளிமலை ஈன்ற குட்டியானது, திடு திடு என்று வேகமாய் ஒடுவதும், அந்த குட்டியின் பின்னே, தொடர்ந்த கறுத்த மலை ஈன்ற ஒரு குட்டியானது பெயர்ந்து அடி வைத்து நடப்பது போல், உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து எல்லை காணாத கீர்த்தி உடையவனாய், ‘பலதேவன்’ என்ற பெயரை உடையவனாய், தன் தமையன் ஆனாவன் முன்னே ஓட பின்னே அவனை கூடுவதற்காக விரைந்து நடக்கும் இவன், தளர் நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பலராமன் வெண்மை நிறம் உள்ளவன் என்பதால், அவன் ஓடுவதற்கு வெள்ளிமலை ஈன்ற குட்டி ஒடுவதையும், கண்ணன் கருநிறம் உள்ளவன் என்பதால் அவன் பின்னே தொடர்ந்து ஓடும் கருமலை ஈன்ற குட்டி தொடர்ந்து ஒடுவதையும் சொன்னார். காரியம் காரணத்தை ஒத்து இருக்கும் என்ற கொள்கையை சொல்கிறார். பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் உண்டு, அதனை நம்பி என்று சொல்கிறார். இப்படி ஓடும் கண்ணன் தளர்நடை நடவானோ என்று சொல்லும் பாடல்.

Leave a comment