திவ்ய பிரபந்தம்

Home

1.8.4 கன்னல் குடம் திருந்தால்

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறிக் கணகண சிரித்து வந்து, * முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன், * தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான், * தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ.

பெரியாழ்வார் திருமொழி 1.8.4

கரும்பு ரசம் கொண்ட கூடமானது வாய் திறந்தது போல், திருப்பவளத்தில் அமிர்தம் ஊறி வழிய, கண கண என்று சிரித்து சந்தோஷத்துடன் முன்னே வந்து நின்று, முத்தம் தருபவனாய், எனக்கு பவ்யனாய், நீலமேகம் போன்ற திரு நிறத்தை உடையவனாய் பெரிய பிராட்டியாரை திருமார்பில் உடையவனாய், தன்னை பிள்ளையாகப் பெற்ற எனக்கு தன்னுடைய திருப்பவளத்தில் ஊறுகின்ற அமிர்தத்தை கொடுத்து, தாயான என்னை, தன்னோடு எதிர்த்த பகைவர்களுடைய தலைகள் மேல் தளர்நடை நடவானோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திருமார்பன் என்று சொன்னது லக்ஷ்மி சம்பந்தத்தை சொல்கிறது.

தன் வாயில் இருந்து கரும்பு சாறு போல் இனிமையான நீர் வடியும் படி சிரித்துக் கொண்டு வந்து எனக்கு முத்தம் கொடுக்கும் தன்மையுள்ள கண்ணன், வாய்விட்டுச் சிரிக்கும் போது உண்டாகின்ற ஒலி, இவன் நடக்கிற நடையழகு கண்டே, இவனது எதிரிகள் தலைகளின் மேல் தளர்நடை பயிலவானோ, அதாவது அவர்கள் தலைகளின் மேல் நடந்து அவர்கள் இறக்க வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது இந்த பாசுரம்.

Leave a comment