திவ்ய பிரபந்தம்

Home

1.7.6 தாரித்து நூற்றுவர்

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது, * போர் உய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள, * பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று, * தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி.

பெரியாழ்வார் திருமொழி 1.7.6

மஹாபாரதத்தில், எல்லோருக்கும் தந்தையாகிய எம்பெருமானுடைய சொல்லைக் கேளாமல் என்ற பொருளுடன் பாண்டவர்களுக்காக தூது சென்று அதன் முடிவாக, துரியோதனும் அவனுடைய சகோதர்களும் போர்க்களத்தில்  எம்பெருமானை ‘ஆயுதம் எடுக்கக்கூடாது’ என்று வேண்டிக் கொண்ட போதும், அவர்கள் அழிந்து, பாண்டவர்கள் வெற்றி கொள்ளும்படி தேரை நடத்தின கைகளாலே, சப்பாணி கொட்டவேணும் என்கிறாள்.

சர்வ லோக பிதாவான உன்னுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல், யுத்தத்தை நடத்துவதாக கர்வத்துடன் வந்து அமர்க்களத்தில் புகுந்தவர்களாய், (பாண்டவர்களை கொன்று தாங்களே) பூமி முழுவதும் ஆளுவதாக வெகு தூரம் யோசித்த அரசர்களான கௌரவர்கள் நூறு பேரும் மாளும் விதம், (உன்னை அல்லாது வேறு துணை இல்லாத), பாண்டவர்கள் ஐவர்களுக்கும் அவர்கள் உன்னை வேண்டி கொண்ட படி, (ஆயுதம் எடுக்க முடியாததாலே, அன்று, பகைவர் அனைவரின் திட்டங்களையும் தேர் காலில் நெரித்து), தேரை நடத்திய திருக்கைகளால் சப்பாணி கொட்டு, தேவகி வயிற்றில் பிறந்த சிங்கம் போன்ற செருக்கை உடையவனே சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

3 responses to “1.7.6 தாரித்து நூற்றுவர்”

Leave a comment