ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை, * நாட் கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன், * வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும், * வேட்கையினால் சொல்லுவார் வினை போமே.
பெரியாழ்வார் திருமொழி 1.7.11
இந்த உலகினில் தோன்றிய அனைவரையும் திருத்தி ஏற்றுக் கொள்வதற்காக அவதரித்த கண்ணனை நோக்கிச் சப்பாணி கொட்டுமாறு சொன்ன இப்பாசுரங்கள் பத்தையும் அன்புடன் பாட வல்லவர்களின் பாவங்கள் அழிந்து போகும் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.
எல்லோரையும் ஆட்கொள்வதற்காக திருவாய்பாடியில் திருஅவதாரம் செய்த, இடையவர்களுக்கு தலைவன் ஆனவனே, நாள் தோறும் பரிமளிக்கின்ற புஷ்பங்களை உடைய சோலைகளால் சூழப்பட்ட ஸ்ரீவில்லி புத்தூருக்கு நிர்வாககரான பட்டர்பிரான் (பெரியாழ்வார்) விருப்பத்தாலே அருளிச் செய்த சப்பாணி விஷயமான இந்த பத்து பாசுரங்களையும் அன்புடன் பாடுகிறவர்களின் துன்பங்கள் எல்லாம் தன்னடையே அறவே போய்விடும் என்று சொல்லி முடிக்கிறார்.
திருஅவதாரம் செய்தது வடமதுரை என்றாலும் அது பிரகாசித்ததும் பிரயோஜனபட்டதும் திருவாய்ப்பாடியில் என்கிறார். தன்னை தாழவிட்டு, தன்னுடைய நீர்மையால் (எளிமையால்) எல்லோரையும் வசீகரித்து ஆட் கொண்டது சொல்லப்பட்டது.
Leave a comment