திவ்ய பிரபந்தம்

Home

1.7.4 தூநிலா முற்றத்தே போந்து

தூநிலா முற்றத்தே போந்து விளையாட, * வானிலா அம்புலீ சந்திரா வாவென்று * நீ நிலா நின் புகழாநின்ற ஆயர் தம், * கோநிலா வக்கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி.

பெரியாழ்வார் திருமொழி 1.7.4

ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற சந்திரனே! ஓ அம்புலி, கண்ணன் விளையாடும்படி நீ சற்று இப்படி வருவாயாக என்று அழைத்துக்கொண்டே, கண்ணனை முற்றத்தில் நின்றுகொண்டு நந்தகோபன் மனம் மகிழுமாறு சப்பாணி கொட்டு என்று யசோதை கூறுவதாக அமைந்த பாடல்.

ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற ஓ அம்புலி, ஓ சந்திரனே, வந்து அழகிய நிலவை உடைய முற்றத்திலே விளையாடுவதற்காக வா என்று அழைத்து, உன்னை புகழ்கின்ற இடையர்களுக்கு தலைவனான நந்தகோபர் சந்தோஷிக்கும்படி சப்பாணி கொட்டு, திருக்குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனே நீ நின்று சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

Leave a comment