திவ்ய பிரபந்தம்

Home

1.7.5 புட்டியில் சேறும் புழுதியும்

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து, * அட்டி யமுக்கி அகம்புக் கறியாமே, * சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் * பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி.

பெரியாழ்வார் திருமொழி 1.7.5

கண்ணன் புழுதியில் விளையாடும்போது, உடம்பில் உண்டான வியர்வை நீரால் நனைந்து புழுதி படிந்த இடம் சேறாகவும் புழுதி படியாத இடம் மண்ணாகவும் இருக்கும்.  அப்படியே வந்து தன் மேலணைந்தால் அந்தச் சேறும் புழுதியும் தன்மேலும் படிந்துவிடும்.  தின்றுதிரியும்  கன்றுபோலே  நெய் பால் தயிர்களைக் களவினால் தின்று திரிவதையே பொழுது போக்காக உடையவனே என்கிறாள்.

திரு அரையிலே, நனைந்த இடம் சேற்றையும், நனையாத இடம் புழுதியையும், கொண்டு வந்து மேலே இட்டு உறைக்கும்படி பூசி, உள்ளே நுழைந்து ஒருவரும் அறியாதபடி சட்டிகளில் சேமித்து வைத்த தயிரையும் தாழிகளில் சேர்த்து வைத்த வெண்ணையையும் களவே யாத்திரை என்னும்படி, வாரி விழுங்குகின்றவனாய், தின்று திரிக்கிற கன்று போல செருக்குடன் இருப்பவனே, சப்பாணி கொட்டு, திருத்தாமரையை திருநாபியில் உடையவனே, சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

Leave a comment