திவ்ய பிரபந்தம்

Home

1.7.3 பன்மணி முத்து இன் பவளம்

பன்மணி முத்து இன் பவளம் பதித்தன்ன, * என் மணி வண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல், * நின் மணி வாய் முத்திலங்க நின்னம்மை * தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங் கையனே சப்பாணி.

பெரியாழ்வார் திருமொழி 1.7.3

சென்ற பாசுரத்தில் கேட்டுக் கொண்டபடி நந்தகோபர் மடியில் இருந்து சப்பாணி கொட்டின கண்ணனைத் தன் மடியிலேயே வரவழைக்க விரும்பி யசோதை அழைக்கிறாள்.  தாயின் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைக் காண்பது நமக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால், ஆழ்வார் அதனை விரும்பி கேட்கிறார்.

என்னுடையவனாய், நீல மணி போன்ற வடிவை உடையவனே, பலவித ரத்தினங்களும், முத்துகளும் இனிமையான பவளமும் அழுத்தி பரந்த அழகை உடைய, பிரகாசிக்கிற, தங்க செவி குண்டலத்தின் அழகுக்கு மேல் உன்னுடைய அழகிய திருவாயில் திருமுத்துகள் விளங்க உன்னை மகனாகப் பெற்ற, தாயான யசோதையின் மடியில் இருந்து சப்பாணி கொட்டு, சப்பாணி கொட்டு; திருவாழி ஆழ்வானை தன்னுடைய அழகிய கையில் உடையவனே, சப்பாணி கொட்டு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

Leave a comment