பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி, * தன்னரை யாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட, * என்னரை மேல் நின்றிழிந்து உங்கள் ஆயர்தம் * மன்னரை மேல்கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.
பெரியாழ்வார் திருமொழி 1.7.2
பொன்னால் செய்த அரை நாணோடு சேர்ந்த மாணிக்கத்தால் செய்யப்பட்ட கிண்கிணியானது, தனக்கு இருப்பிடமான அரையில் சப்தம் செய்யவும், தன் தனித்தன்மை வாய்ந்த சுட்டியானது நெற்றியில் தாழ்ந்து அசையவும், என் அரையில் நின்றும் இறங்கி உங்கள் தகப்பனாரான, இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்தகோபருடைய மடியில் இருந்து சப்பாணி கொட்டு, மாயவனே சப்பாணி கொட்டாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணபிரான் தன் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்ப்பதைக் காட்டிலும் தகப்பனார் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்த்தால் அவனடைய அத்தனை அழகினையும் உகக்கலாம் என்று யசோதை சொல்வது.
Leave a comment