திவ்ய பிரபந்தம்

Home

1.6.8 உன்னையும் ஒக்கலையில் கொண்டு

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி, உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும், * கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக், கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி, * மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள் சூழ், சோலை மலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே, * என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை, ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.8

பிரளயத்திலும் அழியாத திருக்குறுங்குடியில் எழுந்து அருளி இருப்பவனே, திருவெள்ளறையில் உறைகின்றவனே, மதிலாளே சூழப்பட்ட திருமாலரிஞ்சோலை மலைக்கு அதிபதி ஆனவனே, திருக்கண்ணபுரத்தில் நிற்கின்ற அமிர்தம் போல போக்கியம் ஆனவனே, என்னுடைய துன்பத்தை நீக்குபவனே, உன்னையும் இடுப்பில் எடுத்து கொண்டு, தங்கள் வீடுகளில் உன்னோடு, தங்களின் நினவுகளுக்கு தகுந்த படி பரிமாறி, மீண்டும் உங்களை திருப்பி கொண்டு வரும் இளம் பெண்களும், இந்த செய்தியை கண்டு சந்தோஷிக்கும்படியும், பார்த்தவர்களின் கண்கள் குளிரும்படியும் நாலு சொல் தொடுக்க கற்றவர்கள் பிள்ளை கவிகள் தொடுத்து வர, உன்னை மகனாக பெற்ற என் விஷயத்தில் கிருபை செய்து, செங்கீரை ஆடுகவே, சப்த லோகங்களுக்கும் சுவாமி ஆனவனே, ஆடுக ஆடுகவே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இவன் இடுப்பில் இருக்கும் போது, இவர்கள் எப்படி இவர்கள் வீடு அறிந்து அங்கு சென்றார்கள் என்று வியக்கிறார்.

உன்னை  இடுப்பில் எடுத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குச் சென்று, உன்னை அனுபவிக்கின்ற இளம் பெண்களும் மனம் மகிழும்படியும், பார்க்கிறவர்கள் கண்கள் குளிரும்படியும், கவிஞர்கள், கற்றவர்கள் கவிதைகள் பாடும் படியும் செங்கீரை ஆடவேண்டும் என்கிறார். ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தார் என்பதை பல கோவில்கள் பெயர்கள் மூலம் தெரிவிக்கிறார்.

Leave a comment