திவ்ய பிரபந்தம்

Home

1.5.10 மைத் தடங்கண்ணி யசோதை

மைத் தடங்கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை * ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர் * வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை, * எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே

பெரியாழ்வார் திருமொழி 1.5.10

கறுத்த, பெரிய கண்களை கொண்ட யசோதை, தன மகனான இவனுக்கு, நினைவுக்கும் சொல்லுக்கும் சேர்ந்தவையான இவற்றைச் சொல்லி, சந்திரனை நோக்கி சொன்ன பாசுரத்தை தேஜஸ் உடைய ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த மங்களாசாசன ஸமர்த்தரான பெரியாழ்வார் விஸ்தரித்து அருளிச் செய்த தமிழ் வடிவில் வந்த இந்த பாசுரங்கள் பத்தையும் ஏதேனும் ஒருபடியாக ஓத வல்லவர்களுக்கு துக்கம் இல்லைஎன்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அஞ்சனத்தால் கறுத்தும் பெருத்தும் அலங்காரம் செய்த கண்களை உடைய யசோதை என்கிறார். அஞ்சனவண்ணனான இவனை பார்த்துக்கொண்டே இருப்பாத்தல் கறுத்தும் பெருத்தும் இருந்த கண்கள் என்கிறார். இவள் சந்திரனிடம் தன் மகன், ‘சந்திரா! வா’ என்று மென்மையாகவும் வன்மையாகவும் சொல்லிக் காட்டி, அச்சுறுத்தி, புகழ்ந்து பேசின பாசுரங்களை, எப்படியாவது சொல்ல வல்லவர்களுக்கு துன்பமெல்லாம் நீங்கி ஆனந்தம் விளையும் என்று இந்த பதிகத்தின் பலன் சொல்லி முடிக்கிறார். 

Leave a comment