பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள், * ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன், * மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளு மேல் * மாலை மதியாதே மாமதீ மகிழ்ந்தோடிவா.
பெரியாழ்வார் திருமொழி (1.5.7)
பெருந்தன்மை தங்கிய சந்திரனே, ‘இவன் சிறு பிள்ளை’ என்று நினைத்து அலட்சியம் செய்யாதே; முன்பு ஓரு காலத்தில் ஆலந்தளிரில் திருக்கண் வளர்ந்த சிறு பிள்ளையானவன் இவன்; (இவன்) சீறினால், மேல் எழுந்து குதித்து (உன்னை) பிடித்துக் கொள்வான்; (ஆகையால்) இப்படி பெரியவனானவன் விஷயத்தில் சிறியன் என்று அலட்சியமாக நினையாமல் (இவன் நம்மை அழைக்கப்பெற்றோமே ‘) என்ற உகப்பை உடையவனாய் ஓடி வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment