திவ்ய பிரபந்தம்

Home

1.6.3 நம்முடை நாயகனே

நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே நாபியுள் நற்கமல நான்முகனுக்கு ஒரு கால், * தம் மனையானவனே தரணி தல முழுதும் தாரகையின் உலகும் தடவி அதன்புறமும், * விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ்விடையும் விரவிய வேலை தனுள் வென்று வருமவனே, * அம்ம எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.

பெரியாழ்வார் திருமொழி 1.6.3

எங்களுடைய நாதனே, நான்கு வேதங்களின் பொருளாய் இருப்பவனே, திரு நாபியில் உண்டான நல் தாமரை மலரில் பிறந்த நான்கு முகங்கள் உடைய பிரம்மாவிற்கு அவன் வேதத்தை பறிகொடுத்த காலத்தில், தாய் போலே பரிவானவனே, உலகம் முழுவதிலும் மேல் உலகங்கள் எங்கும், தன்னுடைய திருவடிகளால் தடவி, அதற்கு புறம்பாய் உள்ள தேசம் எங்கும் பரிபூரணம் ஆகும்படி, திரிவிக்ரமனாக வளர்ந்தவனே, குவலயாபீடம் என்ற யானையையும், ஏழு ரிஷபங்கள் உன்னை ஹிம்சிப்பதற்காக உன்னோடு வந்து கலந்த தருணத்தில், அவற்றை வென்று வந்தவனே, ஸ்வாமியே, எனக்கு ஒருகால் செங்கீரை ஆடி அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மதுகைடபர்கள் பிரம்மனிடம் இருந்து வேதங்களைப் பறித்துக்கொண்டு போனபோது, அவ்வேதங்களை எம்பெருமான் மீட்டுக் கொடுத்து பிரம்மனின் துயர் தீர்த்தான்.

Leave a comment