திவ்ய பிரபந்தம்

Home

1.5.9 தாழியில் வெண்ணெய் தடங்கையார

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய, * பேழை வயிற்று எம் பிரான் கண்டாய் உன்னைக் கூவுகின்றான், * ஆழி கொண்டு உன்னை எறியும், ஐயுற வில்லை காண், * வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடிவா.

பெரியாழ்வார் திருமொழி 1.5.9

பெருமைஉடைய சந்திரனே, தாழியில் சேர்த்து இருந்த வெண்ணையை விஸ்தாரமான கை நிறையும்படி அள்ளி அமுது செய்த விசாலமாய் பருத்த திரு வயிறு உடையவனாய் எங்கள் குலத்துக்கு உபகாரகனாய் இருக்கிறவன் உன்னை அழைக்கிறான்; (அப்படி அழைத்த போதும் நீ வாராதிருந்தால் உன் தலையை அறுப்பதற்காக ) உன்மேல் திருவாழியைக் கொண்டு எறிவான்; இதில் ஓரு சந்தேகமும் இல்லை; நீ ஜீவிக்க வேண்டி இருந்தால் மகிழ்ந்து ஓடி வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

யசோதை சந்திரனிடம் இந்த குழந்தை, உன்னை விரும்பி அழைப்பது, வெண்ணெயை வாரி விழுங்கியது போல் ஆசையினால் என்றும், அப்படி வெண்ணெயை எட்டாதபடி வைத்தால் கல்லை எறிந்து வெண்ணைக் குடத்தை உடைப்பது போல் நீயும் வராமல் இருந்தால், இவன் சக்ராயுதத்தினால் உன் தலையை அறுத்திடுவான் என்றும் நீ பிழைத்திருக்க விரும்பினால் வந்துவிடு என்றும் கூறுகிறாள்.

வெண்ணையை விஸ்தாரமாக அள்ளி, அமுது செய்த விசாலமாய் பருத்த திருவயிறு உடையவனாய் எங்கள் குலத்திற்கு உபகாரனாய் இருக்கிறான். உன் பெருமைக்கு ஈடாகும்படி வந்துவிடு என்கிறாள்.

Leave a comment