திவ்ய பிரபந்தம்

Home

1.5.8 சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை

சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய், * சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள், * சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண், * நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

பெரியாழ்வார் திருமொழி (1.5.8)

பூரண சந்திரனே, என்னுடைய சிங்கக்குட்டி போன்ற பிள்ளையை சிறு பிள்ளை என்று அவமதி செய்யாதே; இவன் பால்யத்தினுடைய வார்த்தை விசேஷத்தை மஹாபலியிடத்தில் போய் கேட்டுக் கொள் ; (இப்படி உள்ளவன் விஷயத்தில்) சிறுமை நினைத்தது ‘அபராதம்’ என்று நினைத்தாயானால் (அப்போது) நீயும் அவன் விஷயத்தில் தாஸ்யத்துக்கு தகுந்தவன் ஆவாய்; சர்வாதிகனான இவன் விரைந்து உன்னை அழைக்கின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘சந்திரனே ! என் சிங்கக்குட்டி போன்ற குழந்தையை, ஒரு சிறியவன் தானே என்று இகழ்ச்சியாக நினைக்காதே, இவன் முன்பு சிறிய உருவம் எடுத்து மாவலியிடம் செய்த காரியங்களை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்’ என்றும், ‘மிகப் பெரியவனான இவனை அலட்சியம் செய்தது அபசாரம் என்று உணர்ந்து கொண்டால் தான், நீ இவனுக்கு சேவை செய்யும் யோக்யதை பெறுவாய்’ என்றும் சொல்கிறாள்.   நெடுமால் என்பதற்கு சர்வாதிகனானவன் என்று பொருள் சொல்லி அவன் விரைந்து உன்னை அழைக்கிறான் என்றும் சொல்கிறார்.

வாமனனாய் சென்று, வசீகரித்து ‘மூவடி’ என்று யாசித்து, இரண்டு அடியால் இவ்வுலகும் மேலுலகும் அளந்து, ஓரடிக்கு சிறையில் வைக்கப்பட்ட மகாபலியிடம் சென்று கேட்டு கொள் என்கிறாள்.

Leave a comment