வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட, * அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய, * செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல், * எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.
பெரியாழ்வார் திருமொழி (1.4.10)
பேய் வடிவை மறைத்து, தாய் வடிவு கொண்டு வந்த பூதனையின் முலையை அவள் முடியும்படி உண்டா கரிய மேனியை உடைய கண்ணனை தாயான யசோதை தாலாட்டின படிகளை செவ்விய சொல்லை உடைய வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் (வேதியர்) சேர்ந்து வசிக்கின்ற ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பிராமணர்களில் உத்தமரான பெரியாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை குறைவு படாமல் ஓதவல்லவர்களுக்கு துன்பமானது இல்லையாம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட என்று சொன்னது, ‘தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான்‘ பெரிய திருமொழி (1.5.6) போல ஆகும்.
Leave a comment