திவ்ய பிரபந்தம்

Home

1.4.9 மெய்திமிரும் நானப் பொடியோடு

மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும், * செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும், * வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள், * அய்யா அழேல்அழேல் தாலேலோ! அரங்கத்தணையானே தாலேலோ!!

பெரியாழ்வார் திருமொழி (1.4.9)

பிரம்மா, ருத்ரன், இந்திரன், வானுலக தேவதைகள், வயிச்சிரவணன் (குபேரன்), கடல் தேவதை வருணன், பெரிய பிராட்டியார், ஸ்ரீ பூமி பிராட்டி, இவர்களுக்குப் பிறகு, அவதார காலத்தில் கூட பிறந்து, இந்த குழந்தையை பேணிப் போன, தன்னுடைய ஸ்நேககுணம் காரணமாக, துர்க்காதேவி செய்த உபகாரத்தை இந்த பாடல் சொல்கிறது.

திருமேனியில் திமிரும் கஸ்தூரி, கற்பூரம், சந்தனம் முதலிய சுகந்த பொடியோடு கூட, மஞ்சள் பொடியையும், சிவந்ததாய் விசாலமான கண்களில் சாத்துகைக்குத் தகுதியான மையையும் சிந்தூரத்தையும், வெவ்விய ஆண் மானை வாகனமாக கொண்ட துர்கா தேவி, எடுத்துக் கொண்டு, அதிக தூரத்தில் இல்லாமலும், வெகு அருகில் இல்லாமலும் நின்றால்; ஸ்வாமியானவனே, அழேல், அழேல் தாலேலோ, திரு அரங்கத்தில் அரவணையில் பள்ளி கொண்டு அருளுமாவனே, தாலேலோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பதிகத்தின் முதல் பாட்டில் பிரம்மதேவன் சொன்னதால், அவனுக்கு மனைவியான ஸ்ரஸ்வதியை இப்பாட்டில் சொல்லி முடிக்கிறார் என்றும் கொள்ளலாம், ஏன் எனில், வெய்ய கலை என்பதை வெப்பதை சொல்வதாய் கொண்டு, கலைகளை நாவில் நடத்துகின்ற சரஸ்வதியை குறித்து சொல்வதாக கொள்ளலாம்.

Leave a comment