சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும், * அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும், * அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், * செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
பெரியாழ்வார் திருமொழி 1.4.4
பிரம்மா, ருத்ரன், இந்திரன் இவர்களுக்கு பிறகு, வானுலகில் தேவவதைகள், இவனுக்கு அளித்த சிறு அன்பளிப்பை சொல்கிறது.
சங்குகளில் சிறந்த வலம்புரிச் சங்கமும் செவ்விய திருவடிகளில் சாத்தத் தகுந்த சதங்கைகளும், அழகிய திருக் கைகளுக்கு அலங்காரமான முன் கைவளைகளும் திருத் தோள் வளைகளும் திரு மார்பில் சாத்தத்தக்க பொன் நாணும், அரை நானும் (ஆகிய இவற்றை) அழகியதாய் விசாலமான மேல் உலகங்களில் உள்ள தேவர்கள் கொடுத்து அனுப்பினார்கள். சிவந்த கண்களையும் கறுத்த மேகம் போன்ற வடிவை உடையவனே, தாலேலோ – தேவகிப் பிராட்டியின் வயிற்றில் பிறந்த சிங்கக்கன்று போன்ற பிள்ளாய், தாலேலோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சர்வ லோகங்களில் உள்ள தேவதைகள் பலர் பல நகைகளை அனுப்பியதை சொல்லி தாலாட்டுகிறாள். தேவகியின் வயிற்றில் பிறந்த சிங்க கன்று போன்றவனே தாலேலோ என்று பாடுகிறார்.
Leave a comment