சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து, * ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண், * தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே, * மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்.
பெரியாழ்வார் திருமொழி (1.5.4)
சந்திரனே, திருவாழி ஆழ்வானை திருக்கையில் கொண்டவன், பெரிய திருக்கண்களால் மலரப்பார்த்து என் இடுப்பிலே இருந்து கொண்டு உன்னையே குறித்துக் காட்டுவதைக் காண். உனக்குத் தகுதியானதை உணறுவாயாக்கில் வெறுப்பு செய்யாமல் (கபடம் செய்யாமல்) பிள்ளைகளைப் பெறாத மலடனாக இல்லாமல் இருநதால் வந்து னில என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
யசோதை சந்திரனிடம் இவனை குழந்தையாக நினைத்து அலட்சியம் செய்யாதே என்றும், இவன் கருதுமிடம் பொருதும் (கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது – திருவாய்மொழி 10.6.8) திருஆழியானை கையில் ஏந்தி, சக்கரக்கையன் என்றும் நீ வராமல் இருந்தால், உன் மேல் சக்கரத்தை விட்டு உன்னைத் தண்டித்து விடுவான் என்றும் சொல்கிறாள்.
தன் கண்களால் பிரியத்துடன் உன்னை பார்த்து அழைத்தான். உனக்கு தகுதி என்று உணர்ந்தால், மக்கள் பெறாத மலடன் இல்லையானால் ஒரு கபடமும் செய்யாமல், வந்துவிடு என்கிறாள்.
Leave a comment