ஓதக் கடலின் ஒளி முத்தின் ஆரமும், * சாதிப் பவளமும் சந்தச் சரி வளையும், * மா தக்க என்று வருணன் விடுதந்தான், * சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!
பெரியாழ்வார் திருமொழி 1.4.6
பிரம்மா, ருத்ரன், இந்திரன், வானுலக தேவதைகள், வயிச்சிரவணன் (குபேரன்) இவர்களுக்கு பிறகு, கடல் தேவதை வருணன், இவனுக்கு அளித்த சிறு அன்பளிப்பை சொல்கிறது.
அலை எறிகிற சமுத்திரத்தில் உண்டாகிற, ஒளியை உடைய முத்துக்களால் கோக்கப்பட்ட மாலையையும், நல்ல ஜாதியில் உண்டான பவள வடத்தையும், அழகிய முன்கை வளைகளையும், தோள் வளைகளையும், விலையில் சிறந்தத்தாய் தகுதியாய் இருந்துள்ளவை’ என்று வருண தேவனானன் கொடுத்து அனுப்பினான்; மிக்க தேஜஸை உடைய கேரீடத்தை உடையவனே, தாலேலோ, அழகிய தோள்களை உடையவனே, தாலேலோ என்பது இந்த படாலின் பொழிப்புரை.
Leave a comment