என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு, * சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு, * இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி, * தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!
பெரியாழ்வார் திருமொழி (1.4.3)
பிரம்மா, ருத்ரன் இவர்களுக்கு பிறகு, தேவேந்தரன், இவனுக்கு அளித்த சிறு அன்பளிப்பை சொல்கிறது.
எனக்கு ஸ்வாமியாய், அழகிய திரு மார்பை உடையவனாய், அழகிய நிறத்தை உடைய தாமரைப்பூ போன்ற திருவடிகளை உடைய உனக்கு தேவேந்திரனும் அழகை உடைய கிண்கிணியை (சதங்கையைக்) கொண்டு சமர்ப்பித்து வெகு தூரத்தில் இல்லாமலும், மிகவும் அருகில் இல்லாமலும் மத்யத்தில் நின்றான்; தாலேலோ, தாமரைப் போன்ற திருக்கண்களை உடையவனே, தாலேலோ என்பது இந்த பாடலின் பொழகிப்புரை.
என் தம்பிரான் என்று சொன்னது, அவனது திருமார்பின் அழகுக்கு தோற்று சொன்ன வார்த்தைகள்.
இப்படி கொடுத்தவர்களை தாமரை கண்களால் குளிர கடாக்ஷித்ததை சொல்கிறார்.
உவன் என்பது நடுவில் இருப்பதை காட்டுகிறது. அதிக தூரத்திலும் அதிக சமீபத்திலும் நடுத்தரமாய் இருப்பவன் என்று பொருள்.
Leave a comment