உடை ஆர் கன மணியோடு ஒண் மாதுளம்பூ, * இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு, * விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்; * உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலகம் அளந்தானே தாலேலோ!
பெரியாழ்வார் திருமொழி (1.4.2)
அண்டாதிபதியான பிரம்மாவிற்கு பிறகு, எம்பெருமானின் அபிமானியான ருத்ரன், இவனுக்கு அளித்த சிறு அன்பளிப்பை சொல்கிறது.
திருவரைக்கு பொருந்தின பொன்மணியோடு நடுநடுவே கலந்து கோக்கப்பட்ட அழகியதான இடையில் சொருகக்கூடிய கத்தியுடன் அழகிய மாதளம் பூக்கோவையான அரைவடத்தை ரிஷப வாகனனாய், கபாலதாரியாய், ருத்ரன் கொடுத்து அனுப்பினான் ; எல்லாவற்றையும் உடையவனே, அழாதே கொள் ; அழாதே கொள் ; தாலேலோ, உலங்கங்களை அளந்து அருளினவனே தாலேலே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எல்லோரையும் அவர்களது உடைமைகளோடு எல்லாவற்றையும் உடையவனே என்பதை உடையாய் என்பதால் சொல்கிறார். உலகு அளந்த சரித்திரத்தினாலே உன்னுடைய சர்வ ஸ்வாமித்வத்தை உறுதி இட்டவனே, தாலேலோ என்று கண்ணனை தாலாட்டுகிறாள்.
Leave a comment