பெருமா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு, * இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை, * குருமா மணிப் பூண் குலாவித் திகழும், * திருமார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி 1.3.10
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம் இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருமார்பு.
மிகவும் பெரியதான உரலோடு கட்டுண்டு இருந்து அங்கு இரண்டு பெரிய மருதமரங்களை முறித்த இந்த பிள்ளையின் மிகச் சிறந்த கௌஸ்துப ஆபரணம் அசைந்து விளங்கும் திரு மார்பு இருந்தபடியை பாருங்கள்; செவ்விய ஆபரணங்களை உடைய பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவர் யமளார்ஜுன அசுரர்களாக இருந்த மா மருதங்கள்.
சிறந்த ரத்ன ஆபரணம் ஆகிய கௌஸ்துப மணி அசைந்து விளங்கும் திரு மார்பின் அழகை காண வாரீர் என்று சிவந்த ஆபரணங்களை அணிந்தவர்களை அழைக்கிறாள்.
Leave a comment