இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனை, * பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன், * நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும், * மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே.
பெரியாழ்வார் திருமொழி (1.3.7)
திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறிக்குப் பிறகு மருங்கு
பெரிய துதிக்கையை உடைய மத்த கஜமான குவலயா பீடத்தை, தன் வசமாக நடத்துகின்ற பாகனைக் கொன்று, (அந்த கஜத்தின் கொம்புகளை) முறித்துக் கொண்டு ஓடுகின்ற பரமனான கண்ணனுடைய செறியக் கோத்த பவள வடம் என்ன, நேரியதான அரை நான் என்ன, முத்து வடம் என்ன, (இவற்றோடு சேர்ந்த) திருமருங்கும் இருந்தபடியை காணுங்கள், ஒள்ளிய நெற்றியை உடைய பெண்களே வந்து காணீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணனின் இடை அழகையும், அங்கே அணிந்து உள்ள ஆபரணங்களின் அழகையும் காட்டும் பாசுரம் இது. ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்லக் கருதிய கம்ஸன் அவனை அழைக்க, அவனும் பலராமனுடன் வரும் போது, இவர்களைக் கொல்ல இருந்த குவலயாபீடம் என்னும் மதயானையை, அதன் தந்தங்கள் இரண்டையும் பிடுங்கி, அவற்றையே ஆயுதமாகக் கொண்டு பாகனையும் அந்த யானையையும் கொன்ற சரித்திரத்தையும் இங்கே சொல்கிறார்.
பரமன் என்று சொன்னது, ஆயர்பாடியில் இடைபிள்ளைகளோடு விளையாடும் போது, பெரிய யானையாக பாவித்துக்கொண்டு, கைகளை இழுத்து செய்த லீலைகளை சொல்கிறார்.
ஒளி விடுகின்ற அழகை கொண்ட நெற்றியை உடைய பெண்களே, ஆபரணங்கள் அணிந்த கண்ணனின் இடையையும் மருங்கு இருந்தபடியை காணுங்கள் என்கிறார்.
Leave a comment