திவ்ய பிரபந்தம்

Home

1.3.20 அழகிய பைம் பொன்னின்

அழகிய பைம் பொன்னின் கோல் அங்கைக் கொண்டு, * கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப * மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான், * குழல்கள் இருந்தவா காணீரே குவிமுலையீர் வந்து காணீரே.

பெரியாழ்வார் திருமொழி (1.3.20)

திருவடி, திருவிரல்கள், கணைக்கால், முழங்கால்கள், திருத் தொடைகள், சிறுகுழந்தையின் குறி, திருமருங்கு, திருஉதரம், திருமார்பு, திருத் தோள்கள், திருக்கைதலங்கள், திருக்கழுத்து, திருவதரம், திருமுகமண்டலம், திருக்கண்கள், திருப்புருவங்கள், திருமகரக்குழைகள், திருநெற்றி இவைகளுக்குப் பிறகு இந்த பாடலில் திருக் குழலின் அழகை அருளிச் செய்கிறார்.

(கண்டவர்கள் கண்ணுக்கு) அழகியதாய், பசும் பொன்னில் செய்யபட்ட கோலினை, அழகான கைகளில் பிடித்து கொண்டு, திருவடிகளில் அணிந்து இருந்த வீர கழல்களில் (இருந்து வரும்) ஒலியும் சேர்ந்து எங்கும் ஒலிக்க, இளமையான கன்று கூட்டங்களை மடக்கி திரிகிறவனுடைய (கண்ணனின்) திருகுழல்களை காண வாருங்கள் என்று குவியும் முலை உடைய பெண்களே காண வாரீர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நெறித்த குழல்களை நீங்க முன்னோடி‘ (பெரியாழ்வார் திருமொழி 2.6.3) என்று சொல்வது போல அதிர ஒடுகையில் அசைந்து நீங்கிச் செல்லும் திருக்குழலின் அழகு என்கிறார்.

Leave a comment