திவ்ய பிரபந்தம்

Home

1.2.10 செந்நெலார் வயல் சூழ்

செந்நெலார் வயல் சூழ் திருக்கோட்டியூர், * மன்னு நாரணன் நம்பி பிறந்தமை * மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப் * பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே

பெரியாழ்வார் திருமொழி (1.2.10)

செந்நெல் தான்யமானது நிறைந்து இருக்கிற கழனிகளால் சூழப்பட்ட திருக்கோட்டியூரில் நித்ய வாசம் செய்கின்ற நாராயண சப்த வாசனாய் குணா பூர்ணனாக அவதரித்த பிரகாரத்தை விளங்கும் யஜ்ஞோபவீதத்தை உடைய பெரிய ஆழ்வார் அருளிச் செய்ததாய் ஞானிகள் அனுசந்திக்கும்படியான இந்த பாசுரங்களை கற்பவர்களுக்கு பாவம் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

செந்நெல் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீமந்நாராயணன் திருவாய்ப்பாடியில் வந்து திருவவதரித்ததை பெரியாழ்வார் பேசியதும், பக்தர்களுக்கு போக்யமான இந்த பதிகத்தை ஓதவல்லவர்கள் எம்பெருமானை அநுபவிப்பதற்கு இடையூறான பாவங்களில் நின்றும் நீங்கி வாழ்வர் என்று இந்த பதிகத்தை கற்றவர்களுக்கு பலன் சொல்லி முடிக்கிறார்.

Leave a comment