திவ்ய பிரபந்தம்

Home

1.2.4 உறியை முற்றத்து

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், * நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், * செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும் * அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.

பெரியாழ்வார் திருமொழி (1.2.4)

திருவாய்ப்பாடியில் உள்ளஅ கோபர்கள் (பாலும் தயிரும் இருக்கிற உறிகளை முற்றத்திலே உருட்டி நின்று ஆடுவாரும் மணம்மிக்க நெ முதலியவற்றை நன்றாக தானம் செய்பவர்களுமாய் நெருங்கி மெத்தென்ற தலைமுடியானது அவிழ்ந்து கலையும்படி நர்த்தனம் பண்ணி ஊர் முழுவதும் அறிவிழந்தனர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

சிலர் கண்ணன் பிறந்த ஸந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் முற்றத்திலே உருட்டி விட்டு ஆடினார்கள். சிலர், நெய் பால் தயிர் முதலியவற்றை தானம் செய்தார்கள். சிலர், தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள். இப்படி கோகுலத்து இடையர்கள் எல்லாரும் ஸந்தோஷத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் உன்மத்தர் ஆனார்கள்.

Leave a comment