வாயுள் வையகம் கண்ட மட நல்லார், * ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம், * பாய சீருடைப் பண்புடைப் பாலகன், * மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.
பெரியாழ்வார் 1.2.7
பிள்ளையின் வாயின் உள்ளே உலகங்களை பார்த்த மடப்பத்தையும் நன்மையையும் உடைய (கோபா)ஸ்த்ரீகள் (இவன்) கோபகுமாரன் அல்லன், பெறுவதற்கு அரிய தெய்வம், பரம்பின குணங்களை உடையவனாய் நீர்மை உடையவனாய், இந்த சிறு பிள்ளை, ஆச்சர்ய சக்தி உடையவன் என்று சொல்லி மிகவும் ஆனந்தம் அடைந்தார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணனுடைய வாயில் எல்லா உலகங்களையும் கண்ட யசோதை, ஆனந்தத்துடன் மற்ற பெண்களையும் அழைத்துக் காட்ட, அவர்களும் ஆச்சரியப்பட்டு, ‘இவன் நந்தகோபரின் இடைப்பிள்ளை இல்லை, பரமபுருஷனே இப்படி அவதரித்தான்’ என்று கொண்டாடினார்கள்.
வாயுள் வையகம் கண்ட மட நல்லாரான மாதர், பாய சீருடைப் பண்புடைப் பாலகன், ஆயர் புத்திரன் அல்லன், அருந்தெய்வம், மாயன் என்று மகிழ்ந்தனர் என்று அமைத்து பொருள் கொள்ளலாம்.
Leave a comment