கொண்ட தாள் உறி கோலக் கொடு மழு * தண்டினர் பறியோலைச் சயனத்தர் * விண்ட முல்லையரும் பன்ன பல்லினர் * அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்.
நெருங்கி பின்னப் பட்ட உரிகளையும் அழகியதாய் கூர்மை உடைத்தான மழுக்களையும் தடிக்களையும் உடையவராய், தாழை மடலில் இருந்து பறிக்கபட்ட ஓலையால் சமைக்கப்பட்ட சயனத்தை உடையவராய் விகசித்த முல்லை அரும்பு போல பல்லை உடையவரான கோபர்கள் நெருங்கி புகுந்து நெய்யாடல் ஆடினார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தங்களுக்கு தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடைய இடையர்கள் ஆனந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கி வந்து ஸந்தோஷமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் தழுவி நின்று ஸ்தானம் செய்து நெய்யாட்டம் என்ற ஆட்டம் ஆடுகிறார்கள்.
பெரியாழ்வார் திருமொழி (1.2.5)
Leave a comment